பிறந்தநாளன்று பாடல் வெளியீடு

பிறந்தநாளன்று பாடல் வெளியீடு

1 mins read
1de39510-ed0e-41b7-bccb-2662dd613260
நேற்று உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடினார் விக்ரம் மகன் துருவ். படம்: ஊடகம் -

விக்ரம் மகன் துருவ் தனது பிறந்தநாளை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.

தற்போது அவர் நடித்து வரும் 'வர்மா' படத்தின் இரண்டாவது பாடலை நேற்று அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் துருவுக்கு ஜோடியாக பனிதா ஷாந்துவும், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் பிரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.

ரதன் இசையமைப்பில் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாக சொல்கிறார் இயக்குநர். நவம்பரில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று வெளியான பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.