காதலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகி உள்ளது '100% காதல்'. எம்.எம். சந்திரமௌலி இயக்கியுள்ள இப்படத்தின் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார். இவருக்கு ஜோடியாக வருபவர் ஷாலினி பாண்டே. சதீஸ்,
மனோபாலா, நாசர், ஜெயசித்ரா, ரேகா, இயக்கு நர் ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். "இது காதல் கதை என்றாலும் நகைச்சுவையும் தூக்கலாக இருக்கும். நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்," என்கிறார் இயக்குநர் சந்திர மௌலி. இப்படத்தின் இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ்தான். தெலுங்கில் வெளியான '100% லவ்' படத்தின் மறுபதிப்பாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

