பின்னணிப் பாடகர் ஆனார் நடிகர் ஆர்ஜே பாலாஜி

பின்னணிப் பாடகர் ஆனார் நடிகர் ஆர்ஜே பாலாஜி

1 mins read
79e01b6b-9ac0-4006-bf09-de98d4374a1a
வருண் நடிப்பில் உருவாகி உள்ள 'பப்பி' படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறாராம் பாலாஜி. படம்: ஊடகம் -

நகைச்சுவையால் நம்மைக் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி, 'எல்கேஜி' மூலம் நாயகனாகவும் அசத்தினார். அந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன் நல்ல வசூலும் கண்டுள்ளது.

வானொலி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர், கதாசிரியர் என்று பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய ஆர்.ஜே. பாலாஜி, தற்போது பின்னணிப் பாடகராகி உள்ளார்.

வருண் நடிப்பில் உருவாகி உள்ள 'பப்பி' படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறாராம் பாலாஜி. 'சோத்துமூட்டை' என்ற இந்தப் பாடலுக்கு தரண் இசையமைத்துள்ளார்.

படக்குழுவினர் எதிர்பார்த்ததைவிட நன்றாகப் பாடியுள்ளாராம் பாலாஜி. இந்தப் பாடல் இளையர் களை நிச்சயம் கவருமாம்.

'கோமாளி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது வேல்ஸ் நிறுவனம். அக்டோபர் மாதம் இந்தப் படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது.