விபத்தில் சிக்கிய பெண்ணின் கதையைச் சொல்ல வருகிறது 'குஸ்கா'

விபத்தில் சிக்கிய பெண்ணின் கதையைச் சொல்ல வருகிறது 'குஸ்கா'

1 mins read
9c9fb045-7d90-4af7-9c20-669565ec998e
கிஷோர், சஸ்வதா படம்: ஊடகம் -

அறிமுக இயக்குநர் பிஅன்சி கிருஷ்ணா கைவண்ணத்தில் உருவாகிறது 'குஸ்கா'. இதில் கிஷோர், சஸ்வதா இருவரும் நாயகன், நாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பாக்யராஜ், மயில்சாமி, ரேகா, ஆகியோரும் உள்ளனர். சாலை விபத்தில் சிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கும் கதையாம் இது. மேலும் சாலை விபத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து புதிய கோணத்தில் விவரித்துள்ளார்களாம். படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்தப் படம் மக்கள் மத்தியில் விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.