புதுப்படம் ஒன்றில் செய்தியாளராக நடிக்கிறார் நந்திதா ஸ்வேதா.
பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் நந்திதாவின் நடிப்புக்கு கோடம்பாக்கத்தில் நல்ல பெயர் இருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் வெளியான 'காவுலடரி' படத்தின் தமிழ் மறுபதிப்பில் நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இந்நிலையில் நந்திதாவும் இணைந்துள்ளார்.
"இது திகிலும் மர்மமும் நிறைந்த கதையாகும். இக்கதைக்குத் துடிப்பான தமிழில் நன்கு பேசக்கூடிய நடிகை அவசியம் என்பதால் நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளோம். நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும்," என்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
இவர் ஏற்கெனவே விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்', சிபிராஜ் நடித்த 'சத்யா' ஆகிய படங்களை இயக்கியவர்.

