மீண்டும் நடிக்கப் போவதாக வடிவேலு அறிவித்த பின் பட வாய்ப்புகள் வரிசையாகத் தேடி வருகின்றனவாம். இந்நிலையில் கமல்ஹாசனின் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
இது 'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறதாம். முதல் பாகத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அப்போது அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாகப் பேசப்பட்டது. இதை நினைவில் வைத்திருக்கும் கமல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்று தமது குழுவிடம் தெரிவித்தாராம்.
இதையடுத்து வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட தாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இனி தாம் நடிக்க இருக்கும் புதுப்படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும் என்று வடிவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

