புதிய முயற்சிகளை சிலர் எதிர்மறையாக அணுகுவது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
வழக்கமான பாணியில் இருந்து மாற்றத்தைக் கொண்டு வர நினைப்பவர்களை சிலர் ஆதரிப்பது இல்லை என்றும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'சாந்த் கி ஆங்க்' என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார் டாப்சி. இது குறித்து சிலர் விமர்சித்திருப்பது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
"ஒரு வகையில் நாம் முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். என்னைக் கேலி செய்பவர்கள் இதே போல் வயதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் அனுபம் கேரிடமோ, சுனில் தத் தாயாக நடித்த நடிகை நர்கிஸிடமோ, '3 இடியட்ஸ்' படத்தில் கல்லூரி மாணவராக நடித்த அமிர்கானிடமோ கேள்வி கேட்டது உண்டா? குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் எனக்கு மட்டும்தானா?," என்று டாப்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

