புதுப்படம் ஒன்றில் கல்லூரி மாணவியாக நடிக்க உள்ளார் நடிகை ஸ்ரீ பல்லவி.
'தாதா 87' படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான இவருக்கு எடுத்த எடுப்பிலேயே நல்ல கதாபாத்திரங்கள் அமைகிறதாம். முதல் படத்தில் திருநங்கையாக நடித்து பெயர் பெற்றவர். புது படத்தில் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் நாயகனுக்கு ஊக்கமளிக்கும் தோழியாக நடிக்க உள்ளாராம்.
"தனி மனித சுதந்திரமும் உரிமையும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விவரிக்கும் கதை இது. எதற்கும் கவலைப்படாமல் சமுதாயத்துக்குப் பல்வேறு அநீதிகளை செய்யும் வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையேயான போராட்டத்தில் நாயகியும் பங்கேற்கிறாள்.
"கதையைக் கேட்டபோதே இது சவாலான வேடம் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் தயக்கமின்றி நடிக்கிறேன்," என்கிறார் ஸ்ரீ பல்லவி.

