இயற்கையை நேசிக்கும் அமலாபால்

இயற்கையை நேசிக்கும் அமலாபால்

1 mins read
365fd2e2-3097-4a7a-b2e4-f7afb4f243a0
-

இயற்கையோடு ஒன்றி வாழ மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார் அமலாபால். வெறும் பேச்சோடு நிற்காமல், இந்த விருப்பத்தை செயல்படுத்தியும் காட்டியுள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் ஒரு சிறிய பையில் கொஞ்சம் துணிமணிகளை எடுத்துக் கொண்டு, இயற்கை சூழ்ந்த காடுகளைத் தேடி பயணம் மேற்கொள்கிறார் அமலா.

இவருடன் சிறு குழுவும் இணைந்து கொள்கிறது. காட்டுப் பகுதியில் முகாமிட்டு இயற்கையை ரசித்துக் கொண்டு, எளிமையான உணவு வகைகளை சமைத்துச் சாப்பிட்டு பொழுதைப் போக்குகிறாராம்.

''பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் எனக்கு பெரும் அமைதியைத் தந்துள்ளது. இங்கு எனக்கேற்ற வித்தியாசமான வாழ்க்கை காத்திருந்ததை இப்போதுதான் உணர்கிறேன்.

''ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை. இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை தான் பிடித்திருக்கிறது,'' என்று சொல்லும் அமலா, தனது காரை கூட விற்றுவிட்டாராம்.