தெலுங்கில் டாப்சி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அனந்தோ பிரம்மா' படத்தின் மறுபதிப்பாக உருவாகி உள்ளது 'பெட்ரோமாக்ஸ்'. தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.
இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். 'அதே கண்கள்' ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.
இப்படத்தை தீபாவளி சமயத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். எனினும் அச்சமயம் 'பிகில்' மற்றும் 'கைதி' உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சந்தேகம் இருந்தது.
இதனால், இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்திய படக்குழு, படத்தைத் தணிக்கையும் செய்துவிட்டது. 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததை அடுத்து, அக்டோபர் 11ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

