நயன்தாராவுக்கு இந்த மாதம் திருமணம், அடுத்த ஆண்டு திருமணம் என்று நாள்தோறும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் எதையும் அவர் இதுவரை உறதி செய்யவில்லை.
அந்த வகையில், புதுத் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாம். இது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோரது திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம் நயன்தாரா. திருமணச் சடங்கு நிகழ்ச்சிகள் ஐந்து நாட்கள் நடைபெற வேண்டும் என்பதும் அவரது விருப்பம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தக் காதல் ஜோடிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் திருமணத்தை எந்த நாட்டில் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கி உள்ளனராம்.
இந்நிலையில் வட இந்தியாவில் உள்ள பரபரப்பு ஏதும் இல்லாத நகரம் ஒன்றில் திருமணத்தை நடத்தலாம் என்று விக்னேஷ் சிவன் கருதுவதாகவும், இது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

