படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தமன்னா தவறாது கலந்துகொள்வது குறித்துப் படக்குழுவினரும் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகத்தின் அடுத்த பிரம்மாண்டமான வெளியீடாக 'சைரா' படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள் எதிலும் நயன்தாரா பங்கெடுக்கவில்லை. கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்வில் மட்டுமாவது அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.
நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் தமன்னா கலந்துகொண்டார். சென்னை நிகழ்விலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அடுத்து கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களிலும் கலந்து கொள்ள உள்ளாராம் தமன்னா.
படத்தில் அதிக முக்கியத்துவமுள்ள கதாநாயகியாக உள்ள நயன்தாரா கலந்துகொள்ளாத நிலையில், இரண்டாவது கதாநாயகியாகப் படத்திலுள்ள தமன்னா கலந்து கொள்வது திரையுலகினர் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

