உண்மைக் கதை கூறும் 'ஒற்றைப் பனைமரம்'

உண்மைக் கதை கூறும் 'ஒற்றைப் பனைமரம்'

1 mins read
06802e2e-db1d-4e81-8662-8489a3ffdd5e
ஈழத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' படம் உருவாகி இருக்கிறது. இதில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். -

வர்த்தக ரீதியிலான படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' படம் உருவாகி இருக்கிறது. இதில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதியவன் ராசையா இயக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை மகிந்த அபேசிங்க செய்திருக்கிறார். அஷ்வமித்ரா இசை. எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கிறார். இவர் 'நேற்று இன்று', 'இரவும் பகலும் வரும்', 'போக்கிரி மன்னன்' ஆகிய படங்களை தயாரித்து வெளி யிட்டுள்ளார். 40 அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'ஒற்றைப் பனைமரம்' சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை வென்று வந்துள்ளது.