சிபிஐ அதிகாரியாக விவேக்

சிபிஐ அதிகாரியாக விவேக்

1 mins read
7d9519e5-c7ef-41fa-b982-770ef832e07e
'இந்தியன் 2' படத்தில் சிபிஐ அதிகாரியாக விவேக். படம்: ஊடகம் -

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாகவும் இதுவரை பார்க்காத விவேக்கை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல்முறையாக இப்படம் மூலம்தான் கமல்ஹாசன்- விவேக் கூட்டணி இணைந்துள்ளது.