தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சரண்: தேர்ந்த நடிகரைப்போல் நடித்துள்ளார் ஆரவ்

1 mins read
f718b583-2023-4f37-a159-2585b3676625
-

சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாப்பர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. 'பிக்பாஸ்' புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நடித்திருப்பவர் காவ்யா தாப்பர். மேலும், நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி என பல பிரபலங்களும் உள்ளனர். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

"'வசூல்ராஜா' எனக்குத் தலை என்றால் 'மார்க்கெட் ராஜா' எனக்குப் பாதம். இனிமேல் நான் வெற்றிநடை போடுவேன். இப்படத்தில் 'அமர்ககளம்' படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. என் படங்களில் வைரமுத்து, பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். ஆரவ் என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு தேர்ந்த நடிகர்போல் நடித்துள்ளார்,'' என்கிறார் இயக்குநர்.