திகில் கதையைக் கொண்டு உருவாகும் இணையத் தொடர் 'இரு துருவம்'

திகில் கதையைக் கொண்டு உருவாகும் இணையத் தொடர் 'இரு துருவம்'

1 mins read
ecc0a207-c2ec-4274-907b-227322846517
-

தற்போது இணையத் தொடர்களில் நடிக்க முன்னணி நடிகர்களும் விரும்புகின்றனர். அந்த வகையில் சோனி லைவ் நிறுவனம் தயாரிக்கும் 'இரு துருவம்' என்ற இணையத் தொடரில் நடிகர் நந்தா, 'பிக்பாஸ்' அபிராமி ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இத்தொடரை எம்.குமரன் இயக்குகிறார். இவர் 'அரிமா நம்பி', 'இருமுகன்' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். "திரையுலகில் வாய்ப்புகள் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இந்நிலையில் சாதிக்க விரும்பும் கலைஞர்களுக்கு இணையத் தொடர்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. 'இரு துருவம்' திகில் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது," என்கிறார் இயக்குநர் குமரன்.