மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாகி உள்ளார் பிரியா பவானி சங்கர். இப்புதிய படத்தை ராதாமோகன் இயக்க உள்ளார்.
எஸ்.ஜே. சூர்யாவும் பிரியாவும் 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் சொந்தப் படம் தயாரித்து அதில் நாயகனாகவும் நடிக்க உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இதற்கான முதற்கட்ட பணிகளை அவர் துவங்கி உள்ளார்.
இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் பிரியாவிடம் எஸ்.ஜே.சூர்யா படத்துக்கான கதையை விவரித்தாராம் இயக்குநர் ராதாமோகன். கதை பிடித்துப்போகவே அதில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார் பிரியா. தற்போது அவர் 'குருதியாட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் என அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

