'பிக் பாஸ்' கவின்: நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன்

'பிக் பாஸ்' கவின்: நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன்

2 mins read
9a8705db-c318-4880-80d9-d25977ea2902
-

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சமயத்தில் தாம் நிறைய தவறுகளைச் செய்திருப்பதாக நடிகர் கவின் கூறியுள்ளார். தவறுகளை ஒப்புக்கொள்வதாகவும் ரசிகர்கள் தன்மீது காட்டிய அன்புக்கு நன்றி என்றும் அண்மைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் மனம் திறந்துள்ளார்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டவர்களில் கவினும் ஒருவர். எனினும், அப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் சில சர்ச்சைகளில் சிக்கினார். யாரும் எதிர்பாராத வகையில் அப்போட்டியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் யாரையும் சந்திக்கவில்லை. 'பிக்பாஸ்' அனுபவங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

இந்த நிலையில் வழக்கு ஒன்றில் சிக்கிய கவினின் தாயார் சிறையில் அடைக்கப்பட்டார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவின் தனது தாயாரைப் பிணையில் வெளியில் அழைத்து வந்துள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் தன் மனதில் இருப்பதை யெல்லாம் கொட்டி யுள்ளார் கவின். "எந்த இடத்தில் இருந்து துவங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிந்த பிறகோ அல்லது இப்போது எனக்கு இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோ என் மனதில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று இருந்தேன். முதலில் நான் இந்த நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்றேன் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

"நான் முயற்சி செய்த அனைத்திலும் தொடர்ந்து தோல்வி அடைந்த வண்ணம் இருந்தேன். கடந்த இரு ஆண்டுகளில் நான் இழந்தவைகளை எல்லாம் மீட்டெடுக்கும் வாய்ப்பாகவே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன்," என்று குறிப்பிட்டுள்ளார் கவின். மிகவும் நேர்மறையான அணுகுமுறையுடன் அனைத்தையும் முடிந்தவரை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனேயே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த நிகழ்ச்சி மூலம் கொஞ்சம் பணமும் சிறு புகழும் கிடைத்தாலே போதும் என்று மட்டுமே எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார். ஆனால், தம்மால் புரிந்துகொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தைத்தான் தற்போது பார்த்துக் கொண்டிருப்பதாக கவின் சுட்டிக் காட்டியுள்ளார்.