விஜய்யுடன் இணைந்து நடிப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
'தளபதி 64' படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிப்பது தெரிந்த விசயம்தான். இந்நிலையில் இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சேதுபதி. இந்த வாய்ப்பு மகிழ்ச்சி தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார்.

