பிரபல தொழிலதிபருடன் தாம் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
ஒரு சிலர் வேண்டுமென்றே இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுகிறாராம்.
தமிழகத்தைச் சேர்ந்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், மிக விரைவில் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி, ஜெர்ரி இயக்க உள்ளனர்.
இதற்கான முதற்கட்ட பணிகளை படக்குழு துவங்கி உள்ளது. இப்படத்தின் தலைப்பு, பங்கேற்க உள்ள கலைஞர்கள் குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தொழிலதிபர் சரவணன் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்குப் பெரும்தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹன்சிகாவைத் தவிர மேலும் இரு முன்னணி நடிகைகள் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தாம் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என ஹன்சிகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், தன்னைப் பற்றி வெளி வந்த செய்தியை மறுக்கும் வகையில் 'இது உண்மையல்ல' என்று இரண்டே வார்த்தைகளுடன் அவர் முடித்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே தமிழில் வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும், தெலுங்கு தேசம் இவரைக் கைவிடவில்லை.
அங்கு முன்னணி நாயகர்கள் இருவருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
அது மட்டுமல்ல, ஹன்சிகா எதிர்பார்த்த சம்பளமும் கிடைத் திருப்பதாகத் தகவல்.
இந்நிலையில் சம்பளம் குறைவு என்றா லும் மலை யாளப் படங்களில் நடிப்பது என்றும் ஹன்சிகா முடிவெடுத் துள்ளாராம்.
இதை யடுத்து அவ ரது மேலாளர் வாய்ப்பு களை வேட் டையாடி வரு வதாகத் தகவல்.

