'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடித்ததற்கு வருத்தப்படும் நடிகை

'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடித்ததற்கு வருத்தப்படும் நடிகை

1 mins read
2f326cdf-7a66-4189-a44b-733aa290b366
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நான் நடித்ததற்கு இப்போது வருத்தப்படுவதாகச் சொல்கிறார் யாஷிகா ஆனந்த். படம்: ஊடகம் -

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நான் நடித்ததற்கு இப்போது வருத்தப்படுவதாகச் சொல்கிறார் யாஷிகா ஆனந்த்.

அந்தப் படத்துக்கான கதையைக் கேட்ட போது எதிர்மறை விமர்சனங்கள் எழும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

"இது என்னுடைய தவறுதான். என்னிடம் கதை சொன்னபோது இல்லாத விஷயங்களை எல்லாம், 'இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்லி படம்பிடித்தனர். படப்பிடிப்புத் தளத்தில் அதை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், இனிமேல் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டேன். கவர்ச்சியைக் குறைத்துக்கொள்வேன்," என்கிறார் யாஷிகா.