"சினிமாவில் நடிப்பதற்கு கண்கள் மட்டுமே போதும். இரு கண்களிலும் எத்தகைய உணர்வுகளை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்கு பாஷையே தேவை இல்லை," என்று தெரிவித்துள்ளார் நடிகை சாயிஷா சைகல்.
நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாயிஷா அளித்துள்ள பேட்டியில், "நடிகர் அஜய் தேவ்கனுடன் நடித்த 'சிவாய்' படம் வெற்றிபெற்றதால் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன.
"நான் சினிமா குடும்பப் பின்னணியில் வந்தவள். இருந்தாலும் வீட்டில் சினிமா பற்றி பேசுவது குறைவுதான்.
"தென்னிந்திய திரையுலகம் தொழில்நுட்பத்தில் உயர்ந்து இருப்பதை 'காப்பான்' படத்தில் நடித்தபோது உணர்ந்தேன்.
"நடிகர் சூர்யாவுடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்தது. அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்காலத்தில் எனக்கு உதவும். 'ராம் லக்கன்' இந்திப் படத்தை மறுபதிப்பு செய்தால் அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது.
"நடனத்துக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் படம். நான், பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்.
"முழு நடனத் திறமையையும் வெளிப்படுத்தும் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன். அப்படியொரு படத்துக்காகவும் நான் காத்திருக்கிறேன்," என்று சாயிஷா கூறியுள்ளார்.

