ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தப் படம் 4 விருதுகளைக் குவித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் (LAFA) கலந்துகொண்டு சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது 'ராட்சசன்' திரைப்படம். இவ்விருது குறித்துப் பேசியுள்ள தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு, "ராட்சசன் படம் படைத்திருக்கும் இந்த சாதனை மொத்த படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாராட்டுகள் படத்தில் பங்கேற்று உழைத்த அத்தனை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களையே சென்று சேரும். இந்த விருது பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது," என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நான்கு விருதுகளைக் குவித்துள்ள 'ராட்சசன்'
1 mins read
விஷ்ணு விஷால், அமலா பால் -

