பச்சன் என்பது எனது குடும்பப் பெயர். அது எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது அல்ல. குடும்பப் பெயரை எனது பெயரில் வைத்துக்கொண்டதற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப்பச்சன். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரி களிடம் "நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. நான் ஓர் இந்தியன் என்றுதான் கூறுவேன். இப்போதும் அதையே சொல்கிறேன். நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும். இதுவே மிக முக்கியம். எனது தந்தையும் அதைத்தான் செய்வார். அவர் வழியிலேயே நானும் நடைபோடுகிறேன்," என்கிறார் அமிதாப்.
அமிதாப் பச்சன்: நான் ஓர் இந்தியன்
1 mins read
-

