கண் நோயாளிகள் பலருக்கு ஓசையின்றி உதவும் அஜித்

கண் நோயாளிகள் பலருக்கு ஓசையின்றி உதவும் அஜித்

2 mins read
0211f618-8176-47b6-a89b-8a72b286ea8d
-

'பிகில்' படத்தின் படப்பிடிப்பில் 150 நாட்களுக்கு மேல் வேலை பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் 'பிகில்' பெயர் பதித்த மோதிரத்தைப் பரிசளித்து உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். அதேபோல் 'காப்பான்' படக் குழுவில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தலா ஒரு பவுன் தங்கக் காசு பரிசளித்து உற்சாகமளித்தார் சூர்யா.

"நான் பவுன் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது," என்று சூர்யா அன்புக்கட்டளை போட்ட விவரம் வெளியில் கசிந்துவிட்டது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் நாயகனாக நடித்த ஜெய்சங்கர் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் பலமுறை இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறார்.

அவரின் மகன் விஜய் சங்க ருக்கு நல்ல அழகான தோற்றம் இருந்தும் மகனை சினிமாவில் நடிக்க அவர் அனுமதிக்கவில்லை.

"என்னோடு சினிமா தொழில் போகட்டும், உன்னை கண்ணொளி தரும் டாக்டராக்கப்போகிறேன்," எனக் கூறி அவ்வாறே படிக்க வைத்தார்.

தற்போது உலகம் முழுக்க சுற்றிவரும் பிரபல கண் டாக்டரான விஜயசங்கருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருக்கிறார் நடிகர் அஜித்.

தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் டாக்டர் விஜய்சங்கருடன் பொழுதுபோக்குவது தான் அஜித்தின் வழக்கமாம்.

"உங்களிடம் கண் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணவசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள். அந்த நோயாளியின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அந்தந்த நோயாளிக்குச் செலவான பணத்தின் தொகையை எனக்கு அனுப்புங்கள். அதற்கான காசோலை உங்களைத் தேடிவரும்.

"நான்தான் பண உதவி செய்கிறேன் என்பது அந்த நோயாளிக்கு தெரியவே கூடாது, ரகசியம் காக்கவேண்டியது அவசியம்.

"இதுகுறித்து என்னிடம் எதுவும் கேட்கவே வேண்டாம். நீங்களாகவே முடிவுசெய்து சிகிச்சை செய்யுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், நான்தான் பண உதவி செய்கிறேன் என்பது அந்த நோயாளிக்கு தெரியவே கூடாது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம்," என்று டாக்டர் விஜயசங்கருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறாராம் நடிகர் அஜித்.