சமந்தா: நாயகன்களைவிட நாயகிகளே சிரமப்படுகின்றனர்

சமந்தா: நாயகன்களைவிட நாயகிகளே சிரமப்படுகின்றனர்

1 mins read
9511a607-c3cc-42a4-aad4-fbbedaa3c81d
-

சினிமாவில் நாயகன்களைவிட நாயகிகள்தான் அதிக சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்று கூறுகிறார் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா. சினிமாவில் நடிப்பு, தொழில்நுட்பம், தயாரிப்பு என எந்த துறையிலும் பெண்கள் சளைத்தவர்களாக இல்லை. எல்லாவற்றிலும் அவர்களுடைய திறமை பளிச்சிடுகிறது.

எனது திரையுலக அனுபவத்தில் இத்துறையில் நாயகன்களைவிட நாயகிகள்தான் அதிகம் சிரமப்படுகிறார் கள் என்று கூறுவேன். பெண் இயக்குநர், ஆண் இயக்குநர் என்ற வித்தியாசம் போகவேண்டும் என்கிறார் சமந்தா.

நான் நடித்த 'ஓ பேபி' தெலுங்கு படத்துக்கு இயக்குநரோடு சேர்ந்து எட்டு பெண்கள் வேலைசெய்தோம். ஆண்களுக்கு இணையாக உழைத்தனர். ஒருநாள் கூட படப்பிடிப்பில் தாமதம் ஏற்படவில்லை என்று கூறுகிறார் சமந்தா.

சமந்தா அண்மைய பேட்டியில், தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாகவும் அதனாலேயே தான் காதல் கதைகளை நிராகரிப்பதாகவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

"என்னைச் சந்திக்கும் பலரும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. எப்போது விரும்புகிறேனோ அப்போது பெற்றுக்கொள்வேன்.

"நானும் எத்தனையோ பேருடன் நடனமாடிவிட்டேன். இவர்களுள் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருடன் நடனமாடுவதுதான் மிகவும் சிரமமானது.

"அவர் சர்வசாதாரணமாக ஆடிவிடுகிறார். நான்தான் பலமுறை ஒத்திகை பார்ப்பேன். அவருடன் ஆடினால் என் முக அலங்காரம், தலைமுடி எல்லாம் களைந்து வியர்வையில் நனைந்துவிடுவேன்," என்கிறார் சமந்தா.