கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இந்துஜா

கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இந்துஜா

1 mins read
a1debedc-94ee-4409-9be0-b43f5914e7d1
இந்துஜா -

துருவா, இந்துஜா நடிப்பில் ஏ.கே. இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் 'ஜில் ஜில் ராணி' என்ற பாடலை இணைய வெளியில் உலவவிட்ட சில நிமிடங்களில் பல லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்துஜா தான் இந்தப் பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக் காலங்களில் இந்துஜா நடித்த 'மேயாத மான்', '40 வயது மாநிறம்', 'மகாமுனி' போன்ற படங்களில் குடும்பப் பாங்காகத் தோன்றினார். இந்த 'சூப்பர் டூப்பர்' படத்தில் தைரியசாலிப் பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக திரையில் தோன்றுவாராம். தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். அதற்கான வரவேற்பு ரசிகர்களால் இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது. 'ஜில் ஜில் ராணி' பாடல் ரசிகர்களால் ஆதரித்து, ஆராதிக்கப்பட்டு வருகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.