பச்சை விளக்கு: வித்தியாசமான பேய்க் கதை

பச்சை விளக்கு: வித்தியாசமான பேய்க் கதை

1 mins read
291964bf-96b9-4c74-8278-81b338db578c
'பச்சை விளக்கு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

அண்மைய சில ஆண்டுகளாகவே தமிழ்ப் படவுலகில் திகில் மற்றும் பேய்ப் படங்களுக்கு பெரும் மவுசு. எனவே அந்த வகை படங்கள் அதிகளவு தயாரிக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் டாக்டர் மாறன் தனது 'பச்சை விளக்கு' படத்தில் வித்தியாசமான பேய்க் கதையைச் சொல்லி இருக்கிறார். சாலை விதியைக் கடைப்பிடிக்காமல் தவறு செய்பவர்களை இந்த பேய் எவ்வாறு தண்டிக்கிறது என்பதுதான் கதையாம்.

"இதுவரை வந்த எந்த திகில் படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் இந்தப் படம் இருக்கும். இந்த படத்தைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி ஒப்பீடு செய்து பார்க்கும் வகையில் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம்," என்கிறார் இயக்குநர் மாறன்.

இப்படத்தின் நாயகனும் இவர் தானாம். கன்னட நாயகி ரூபிகா பேய் வேடத்தில் நடித்திருக்கிறார்.