பாலியல் புகார் தெரிவிப்பது என்பது இந்தியத் திரையுலகில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் தமிழில் வெளியாகும் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்துள்ள எல்லி அவ்ராம் என்ற நடிகை இரண்டு இயக்குநர்கள் மீது பாலியல் தொல்லை புகார் கூறியுள்ளார்.
இவர் ஏற்கெனவே 'போஸ்டர் பாய்ஸ்;, 'நாம் சபானா', 'பாஸார்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர். சுவீடனைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி இந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொடக்க காலத்தில் வாய்ப்பு தேடியபோது இவர் நேரில் சந்தித்த இரு இயக்குநர்கள் மறைமுகமாக பாலியல் தொல்லை கொடுத்தனராம். இதுகுறித்து தனது மும்பை நண்பரிடம் விவரம் தெரிவித்துள்ளார் எல்லி. அவர்தான் அந்த இயக்குநர்களின் நோக்கத்தைப் புரிய வைத்தாராம். அதன் பிறகு இதுபோன்ற இயக்குநர்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடுகிறாராம் எல்லி.

