வசனத்தை நீக்கிய 'அசுரன்' படக்குழுவுக்கு கருணாஸ் நன்றி

வசனத்தை நீக்கிய 'அசுரன்' படக்குழுவுக்கு கருணாஸ் நன்றி

1 mins read
314c7350-8ea3-4e17-b71e-088f6fa80919
-

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட வசனத்தை இயக்குநர் வெற்றிமாறன் நீக்கியதையடுத்து அவருக்கு நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சமூக மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதால் அந்த வசனத்தை நீக்குமாறு இயக்குநர் வெற்றிமாறனிடம் தாம் கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

"எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் உடனடியாக அந்த வசனத்தை நீக்கியுள்ளார். அவருக்கும் படக் குழுவினருக்கும் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக நன்றி," என தமது அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்.