ரஜினி வீட்டில் நவராத்திரி விழா

ரஜினி வீட்டில் நவராத்திரி விழா

1 mins read
2f82c10c-e8d7-4d25-9421-bb77b013edc0
படம்: ஊடகம் -

நடிகர் ரஜினி காந்தின் மகள்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் எடுக்கப்பட்ட நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இருவரும் ரஜினி மகள்களின் சிறு வயது தோழிகள் ஆவர். இருவரும் ரஜினி குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ரஜினி குடும்பத்தார் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.