'மனவலிமையே ஒரு பெண்ணுக்கு அழகு'

'மனவலிமையே ஒரு பெண்ணுக்கு அழகு'

1 mins read
42735c89-94e5-4145-8d28-c70f88ebdbe2
எத்தகைய சூழ்நிலையிலும் மனவலிமையுடன் செயல்பட வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல் கூறுகிறார். -
Google News Preferred Icon

எத்தகைய சூழ்நிலையிலும் மனவலிமையுடன் செயல்பட வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல் கூறுகிறார்.

ஒருதலைக் காதலை மறுத்ததற்காக இவர் மீது அமிலம் வீசப்பட்டது. அதிலிருந்து மீண்டுவர தானும் குடும்பத்தாரும் மிகவும் சிரமப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

"என் மீது அமிலம் வீசியவன் ஒருமாத சிறைத்தண்டனையுடன் வெளியே வந்துவிட்டான். ஆனால் நான் ஆயுள் முழுவதும் சிரமப்பட வேண்டும்.

"நம் கண்முன் உடலின் மொத்த அழகும் கரைந்து ரத்தத்துடனும் வலியுடனும் உருகும்போது, அழகு பெரிதாகத் தெரியாது.

"நான் இப்போது என்னுடைய மனவலிமையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் மனவலிமை யைத்தான் என்னுடைய அழகாகப் பார்க்கிறேன்.

"மற்ற பெண்களும் இதை மனதிற்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்," என்கிறார் ரங்கோலி.