படப்பிடிப்பில் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

படப்பிடிப்பில் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

1 mins read
bf54af2d-bf99-4e1c-b387-3800d66660bb
-

சென்னை: தவசி படத்தில் 'எஸ்க்யூஸ்மி, சாரி, ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா' என்று வடிவேலுவிடம் ஒசாமா பின் லேடனின் முகவரியைக் கேட்டு பிரபலம் ஆன நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாரடைப்பால் காலமானார்.

கேரள மாநிலம், குமுளி அருகே வண்டிபெரியாறில் நடந்த 'பேய் மாமா' படப்பிடிப்பில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இவரது உடல் நேற்று மாலை சென்னைக்குக் கொண்டு வரப் பட்டது. கிருஷ்ணமூர்த்தி மனைவி பெயர் மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் பெயர் பிரஷாந்த். இரண்டாவது மகன் கெளதம் இயக்குநராக முயற்சி செய்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறிய சிறிய நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து பின்னர் மக்களிடம் பெரும் புகழ்பெற்றார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் 'நான் கடவுள்' உள்ளிட்ட பல படங்களில் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் 50க்கும் மேற்பட்ட படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.