தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆதி நடிக்கும் புதுப் படம்

1 mins read
bb9eb2b0-7e06-4e86-a702-b41d5a52cc90
சுந்தர்சி தயாரிப்பில் ராணா இயக்கத்தில் உருவாகும் 'நான் சிரித்தால்' படத்தில் நடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இவருடன் இணைந்து ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். படம்: ஊடகம் -

நடிப்பு, இசையமைப்பு, பாடல் பாடுவது என அனைத்துப் பணிகளையும் கைவிடாமல் செய்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

இவர் நடிக்கும் அடுத்த படம் 'நான் சிரித்தால்'. இதை ராணா இயக்குகிறார். சுந்தர் சி. தயாரிக்கும் இப்படம் முழுநீள நகைச்சுவைப் படைப்பாக உருவாக இருக்கிறது.

இதில் ஆதியின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்குமாம். ஐஸ்வர்யா மேனன் இவரது ஜோடியாக நடிக்கிறார்.