‘அசுரன்’ வன்முறையைத் தூண்டுவதாக புகார்

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக ‘அசுரன்’ படத்துக்கு அடுத்தடுத்து ஏதேனும் சிக்கல் முளைத்தபடி இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஓரிரு வசனங்களை நீக்க வேண்டு-மென முதலில் போர்க்கொடி உயர்த்தினார் நடிகர் கருணாஸ். அவரது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட சில வசனங்களைப் படத்தில் இருந்து நீக்குவதாக ‘அசுரன்’ இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்தார்.

இதற்கு கருணாஸ் நன்றி தெரிவித்த நிலையில், ‘அசுரன்’ படம் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்று ஒரு தரப்பு புகார் எழுப்பியது. மேலும் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் காட்சிகளும் இப்படத்தில் இருப்பதாக குறை கூறப்பட்டது.

இந்நிலையில் ‘அசுரன்’ யாரையும் பிரிப்பவன் அல்ல மாறாக சேர்ப்பவன் என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.

இத்தகைய சூழலில் மணவர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் ‘அசுரன்’ படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அகில பாரத இந்து மகாசபாவின் மாவட்ட செயலர் ராஜவேல் என்பவர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் ஒரு பள்ளி மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது என்றும், இதை ஏற்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும். தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, பழைய சாதிய நிகழ்வுகளை வன்முறை கலந்து படமாக்கி இருப்பதைக் கண்டிக்கிறோம்.

“மேலும், நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்.

“எனவே, அவரிடம் விசாரணை நடத்தி, அவரது பின்புலத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ராஜவேல் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் நோக்கம் இல்லை என்றும், ‘அசுரன்’ நல்ல கருத்தை வலியுறுத்துகிறது என்றும் இயக்குநர் வெற்றிமாறன் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!