சிம்பு மீது புகார் ஏதும் கூறவில்லை - ஞானவேல்ராஜா

சிம்பு மீது புகார் ஏதும் கூறவில்லை - ஞானவேல்ராஜா

1 mins read
86b21ee9-25b3-4fc7-a615-108457cdcf1c
-

சிம்பு குறித்து தாம் புகார் எழுப்பியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

தற்போது இவரது தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இது கன்னடத்தில் வெளியான 'மஃப்டி' என்ற படத்தின் மறுபதிப்பு ஆகும். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற சிம்பு அதன் பிறகு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அண்மையில் தகவல் வெளியானது.

இதையடுத்து படத்தைக் கைவிட்ட ஞானவேல்ராஜா, சிம்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். 'மஃப்டி'யின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.