‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் தினேஷ்- கயல் ஆனந்தி

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தனது அடுத்த படத்தை அட்டகத்தி தினேஷை வைத்து தயாரித்துள்ளார். ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தினேஷின்  ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இப்படத்தை ரஞ்சித்தின் உதவி இயக்குநரான அதியன் ஆதிரை இயக்குகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல்.