காட்டுக்குள் படப்பிடிப்பா? - வாய்ப்பைப் புறக்கணித்தார் காஜல் அகர்வால்

காட்டுக்குள் படப்பிடிப்பா? - வாய்ப்பைப் புறக்கணித்தார் காஜல் அகர்வால்

1 mins read
1ba2484d-bc6a-4342-8aba-96ce36fe23e1
-

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கில் பிரபல நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். ரஷ்மிகா மந்தனா, கியரா அத்வானி போன்ற பல இளம் நடிகைகளின் வரவால் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கான வாய்ப்புகள் சற்று குறைந்து வருகின்றின.

முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வந்த அவரிடம் தற்போது சிற்சில படங்களே கைவசம் இருக்கின்றன. தற்சமயம் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் காஜலிடம் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க பேசி இருக்கின்றனர்.

ஆனால் பிரபல நடிகர் என்றாலும் அந்த வாய்ப்பை காஜல் நிராகரித்துள்ளார்.

அதாவது கதைப்படி படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதி கர்நாடகாவின் காட்டுப்பகுதிகளில் நடக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அது தனக்குப் பாதுகாப்பாக இருக்காது என சொல்லி காஜல் படத்தை நிராகரித்து விட்டாராம். ஆனால் இதே காரணத்தைச் கூறி நடிகை ராஷி கண்ணாவும் 'கோபிசந்த்' படத்தை நிராகரித்து விட்டாராம்.

எனவே படத்திற்கு ஏற்ற நடிகையை படக்குழு தேடிக் கொண்டிருக்கிறது.