வாழ்த்துகளால் நெகிழ்ந்த அக்‌ஷரா

வாழ்த்துகளால் நெகிழ்ந்த அக்‌ஷரா

1 mins read
8cbf66cf-8bbc-4e9c-8117-3f88e73b150b
-

தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் தன்னிடம் காட்டும் அன்பு நெகிழவைப்பதாக தனது நட்பு வட்டாரங்களிடம் கூறி வருகிறாராம் அக்‌ஷரா. தற்போது 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அக்‌ஷரா. இதில், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அக்‌ஷராவின் பிறந்தநாள் என்பதை அறிந்த படக்குழுவினர், திடீரென படப்பிடிப்புத் தளத்திற்கு பெரிய கேக் ஒன்றை வரவழைத்தனராம். அதை வெட்டச் சொல்லி மகிழ்வித்ததுடன், ஆளாளுக்குப் பாசமாகப் பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து அக்‌ஷாராவை நெகிழ வைத்துள்ளனர்.