சுடச் சுடச் செய்திகள்

விளம்பரங்களில் அசத்தும் அருண் விஜய்

அருண்குமார் என்ற பெயரில் நடிக்கும்போது இவருக்கு அவ்வளவாக படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் அவர் தன்னுடைய பெயரை அருண் விஜய் என்று மாற்றிக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். அஜித்துடன் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதிலிருந்து பல படங்களில் நடித்து வருவதுடன் விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் ‘ஓட்டோ’ சட்டை விளம்பரத்தில் அசத்தலாக நடித்துள்ளார். அந்த விளம்பரத்தைத் தொடர்ந்து பல விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அருண் விஜய்.