அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

நிக்கி கல்ராணி ஒரு மெழுகுச் சிலை போன்ற அழகான நாயகி என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அவர் மிகவும் அன்பானவர், பாசமானவர், அன்பிற்காக ஏங்குபவர், அதுவும் நாய்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் மிகுந்தவர் என்பது அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தவிர, மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

செல்லப் பிராணிகள் மீது உயிரையே வைத்திருக்கும் நிக்கி தன்னுடைய செல்லப்பிராணிகள் பற்றி கூறும்போது, “அவையும் குழந்தைகள் போலத்தான். பாசத்திற்காக ஏங்குவார்கள். அவர்களின் சுகாதாரம் மிக மிக முக்கியம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். செல்லப் பிராணிகள் தங்களது தேவைகளைக் கூற இயலாது. அதனால் நாம்தான் கவனத்துடன் அவற்றைப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று நாய்கள் வளர்ப்பது பற்றி சில குறிப்புகளைக் கூறியிருக்கிறார்.

நிக்கிக்கு நாய்கள் மீது இருக்கும் பாசத்தைப் பற்றி அவர் கூறுகையில், “சிறு வயது முதலே நாய்கள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் கடைக்குட்டியாக இருந்ததால் பெற்றோரின் செல்ல மகள். எனது சுட்டித்தனத்தால் என்னையே சமாளிக்க முடியாது என்பதால் நாய்கள் வளர்க்க என் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

“இருப்பினும் எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்கள் எனக்கு ஒரு நாய்க் குட்டியைப் பரிசாக அளித்தனர். அதற்கு ‘ரோச்செர்’ என்று பெயர் வைத்தேன். அதை என் பெற்றோர்

களால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அதனால் அதை வளர்க்கத் தொடங்கினார்கள்.

“ஆனால், தற்பொழுது என்னை விடவும் எனது அம்மாதான் ‘ரோச்செர்’ மீது மிகுந்த பாசமாக இருக்கிறார். இன்றும் அவன் என் பெற்றோருடன் பெங்களூரில்தான் இருக்கிறான்.

“மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் படங்களில் நடிப்பதில் மும்முரமாக இருந்ததால் சென்னையில் வந்து தங்கிவிட்டேன். படப்பிடிப்பு காரணமாக வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை வரும் என்பதால், இங்கு நாய் வளர்க்கவேண்டாம் என்று முடிவு செய்தேன்.

“பெற்றோரும் நண்பர்களும் பெங்களூரில் இருப்பதால் சில மாதங்களிலேயே தனிமை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகுதான் சாம்பியனை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

“பிறகு சாம்பியன் தனிமையில் இருக்கிறான் என்பதால் அவனுக்குத் துணையாக கிங் காங்கை அழைத்து வந்தேன். அவர்கள் இருவரும் முதலில் சண்டையிட்டுக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

“நான் படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல என் பெட்டியை எடுத்தாலே அவர்கள் கத்தத் தொடங்கிவிடுவார்கள். பெட்டியில் துணிகளை வைக்க விடாமல் என் பெட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு வெளியே வரமாட்டார்கள்.

“நான் சமாளித்து வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அவர்கள் இருவரும் என் மீது தாவிக் குதித்து கொஞ்சுவதற்கு ஈடு வேறு எதுவும் இல்லை.

“அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான துணிகளை வாங்கி வந்து வெளியில் செல்லும் போதெல்லாம் அந்த உடைகளை அணிவித்து இரட்டையர்கள் போல கூட்டிச்செல்வேன்.

“அடிக்கடி கடற்கரை, ‘ஸ்பா’வுக்கு கூட்டிச்செல்வேன். என்னை விட அவர்கள்தான் அதிக அளவில் ‘ஸ்பா’வில் நேரத்தைச் செலவிடுவார்கள். சாம்பியனின் பெற்றோர் இருவரும் நாய்களுக்கான போட்டிகளில் கலந்து

கொண்டு பல பரிசுகளை வென்றவர்கள் என்பதால் அவனது ரத்தத்திலேயே போட்டி மனப்பான்மை இருக்கும் என்பதால் அவனுக்கு ‘சாம்பியன்’ என்று பெயர் வைத்தேன்.

“கிங் காங்’ மிகவும் குட்டியாக இருந்ததால் அவனுக்கு இந்த பெயர் வைத்தேன்,” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார் நிக்கி கல்ராணி.

தற்போது நிக்கி, தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் செல்லப் பிராணிகள் மீது அவருக்கு இருக்கும் அக்கறை அலாதியானது என்கின்றனர் அவரது நண்பர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!