'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை சாக்ஷி தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்ச் சினிமாவில் சில வாய்ப்புகள் தேடி வந்துள்ளனவாம். சில படங்களில் நடிப்பதோடு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும் வலம் வருகிறார்.
ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் 'டெடி' படத்தில் சாக்ஷியும் இணைந்துள்ளார். சதீஷ், கருணாகரன் ஆகியோருடன் இவருக்கும் முக்கியமான வேடத்தை ஒதுக்கியுள்ளாராம் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். இதற்கிடையே சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள புதுப்படத்தில் டப்பிங் பேசியுள்ளார் சாக்ஷி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து பலரும் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

