நடிகை பிரியா ஆனந்த் தமிழில் 'வாமனன்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'சுமோ' படத்தில் நடித்து வருகிறார். இவர் பல மொழித் திரைப்படங்களில் நடிப்பது குறித்து கூறுகையில், "என் தந்தை மராத்தியர். தாய் தெலுங்கர். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். என் தாயமொழிதான் உயர்ந்தது என எவரும் நினைக்கக் கூடாது. அவரவருக்கு அவரவர் தாய்மொழிதான் முக்கியம். எத்தனை மொழிகளைக் கூடுதலாக கற்றாலும் நல்லது தான்," எனக் கூறியுள்ளார்.
'என் தாய் மொழிதான் உயர்ந்தது என எவரும் நினைக்கக் கூடாது'
1 mins read
நடிகை பிரியா ஆனந்த் -

