திரிஷாவின் ஆடம்பர காரைப் பார்த்து வியக்கும் திரையுலகம்

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து, பல நடிகைகளுடன் போட்டிபோட்டு முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தமிழில் வெளிவந்த ‘96’ படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கனவு தேவதை திரிஷாதான் என்பதை நிரூபித்துள்ளார். இப்போது ‘பரமபதம்’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அண்மையில் விலை மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் இந்திய  மதிப்பு ரூ.65 லட்சம். திரிஷாவின் கடின உழைப்புதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆடம்பர காரைப் பார்த்து திரையுலகம் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் மலையாளத்தில் மோகன்லாலுடனும் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க இருக்கிறார். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்