ஆன்ட்ரியாவின் கவிதையால் கலங்கும் அரசியல் வாரிசு

நடிகை ஆன்ட்ரியா அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிப் பேசினார்.

அப்போது திருமணமான ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதன்பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டுவந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அவர் யார் என்பதை தான் எழுதியுள்ள ‘புரோக்கன் விங்’ என்ற கவிதைப் புத்தகம் வெளியாகும்போது தெரியவரும் என்று கூறியிருந்தார்.

அந்தப் புத்தகத்தை அவர் நேற்று வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் புத்தகம் இன்னும் வெளியாக வில்லை.  

ஆன்ட்ரியா சேர்ந்து வாழ்ந்ததாக சொன்ன அந்த நபர் ஓர் அரசியல் வாரிசு நடிகர் என்ற தகவல் மட்டும் இன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற நடிகரா அல்லது அரசியலில் இருந்து சினிமாவுக்குச் சென்ற நடிகரா என சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.