குத்துச்சண்டைக்குத் திரும்பிய ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் மீண்டும் குத்து சண்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே ‘கிக் பாக்ஸிங்’ விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில் அவர் ‘ஓ மை கடவுளே’ எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார். அருண் விஜய்யின் ‘பாக்சர்’ படத்திலும் ‘வணங்காமுடி’ எனும் படத்திலும் ரித்திகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரித்திகா மீண்டும் குத்துச் சண்டைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், “ரித்திகா சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் ‘பாக்சிங்’ செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்