விஜய்சேதுபதி நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் 'லாபம்'. இந்தப் படத்தை இயக்குநர் ஜனநாதன் அரசியலும், கமர்சியலும் கலந்து உருவாக்கி
வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பெருவயல் என்ற கிராமத்தில் நடந்து வருகின்றன. விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி, அந்தக் கட்டடத்தை தாற்காலிக அரங்காக போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச் சொல்லி, படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுத்துவிட்டார். இதனால் கிராம மக்கள் பெரு
மகிழ்ச்சி அடைந்து மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

