'ஹீரோ'வின் இரண்டாவது சுவரொட்டி

'ஹீரோ'வின் இரண்டாவது சுவரொட்டி

1 mins read
4535436f-7699-4c1f-9351-0c0ae45e4770
-

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ஹீரோ. இது இவரது 15வது படம்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், இவானா ஆகியோரும் நடிக்கின்றனர். 'கேஜேஆர் ஸ்டூடியோஸ்' நிறுவனம் சார்பில் காட்பாடி ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் 2வது சுவரொட்டி வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் பின்புறம் திரும்பி நின்றுகொண்டு முகமூடி மாட்டியிருப்பது போன்று அந்த சுவரொட்டி அமைந்துள்ளது.

'இரும்புத்திரை' படத்தைக் கொடுத்த இயக்குநர் என்பதால் 'ஹீரோ'வுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சிவகார்த்திகேயனும் அவரது ரசிகர்களும் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், வெளியான 'நம்ம வீட்டுப்பிள்ளை' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.5.31 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.