'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளர்களான லோஸ்லியா, கவின் ஆகிய இருவரின் பெயரையும் தாம் இனி உச்சரிக்கவே போவதில்லை என இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கவினும் லோஸ்லியாவும் காதல் வயப்பட்டதாகவும் இதற்கு சேரன் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
நிகழ்ச்சி முடிவுக்கு வந்த பிறகு கவின், லோஸ்லியா ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சேரனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதையடுத்து அவரும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், லோஸ்லியா, கவினின் காதலை எதிர்க்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் காதலை ஒத்திப்போடலாம் என்று மட்டுமே தாம் அறிவுறுத்தியதாக சேரன் குறிப்பிட்டுள்ளார்.
'பிக்பாஸ்' வீட்டுக்குள்ளும் வெளியிலும் தான் பேசிய கருத்துகள் யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக தாம் வருந்துவதாகக் கூறியுள்ளார் சேரன்.

