'பாகுபலி' குழுவினரின் இசைக் கொண்டாட்டம்

'பாகுபலி' குழுவினரின் இசைக் கொண்டாட்டம்

1 mins read
f3dbff88-90fe-4e5c-9680-b1e724abf208
-

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட படங்களாக வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்படத்தின் நேரடி இசை நிகழ்ச்சி லண்டனில் உள்ள 'ராயல் ஆல்பர்ட்' அரங்கில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. திரையில் படத்தின் காட்சி ஓடும்போது என்ன இசை இடம் பெற்றதோ அதை இசைக்குழுவினர் மேடையில் வாசிக்கும் நிகழ்ச்சிதான் அன்று நடைபெற்றது. அதற்காக தயாரிப்பாளர் ஷோபு, இயக்குநர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் லண்டன் சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரம்மாண்ட அரங்கில் மக்கள் முழுமையாக நிறைந்திருக்க இசை நிகழ்ச்சி நடைபெற்றதில் படக்குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.